ADDED : மே 29, 2026 06:04 AM
அ நிறம் | அளவு
ஈரோடு, ஈரோடு மாநகராட்சி சார்பில், துாய்மை இந்தியா திட்டம் 2.0 விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, 16வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில், வீடு வீடாக சென்று குப்பை சேகரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
குப்பையை முறையாக தரம் பிரித்து கொடுக்கும் வீடுகளின் சுவரில் 'துாய்மை சிங்கம்' என ஸ்டிக்கர் ஒட்டி குடியிருப்புவாசிகளை கவுரப்படுத்தினர்.முன்னதாக சுற்றுப்புற சுகாதாரம் பாதுகாப்பது தொடர்பாக உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுகாதார அலுவலர், ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
