/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சாலை விரிவாக்க பணிக்காக ஆக்கிரமிப்பு அகற்றம்
/
சாலை விரிவாக்க பணிக்காக ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : நவ 05, 2024 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலை விரிவாக்க பணிக்காக
ஆக்கிரமிப்பு அகற்றம்
அந்தியூர், நவ. 5-
பவானி உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில், ஆப்பக்கூடலில் பெட்ரோல் பங்க்கில் இருந்து பவானி சாலை வரை, 400 மீட்டருக்கு சாலை விரிவாக்கப்பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால் சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்திருந்த கடைகளை, அகற்றிக்கொள்ள நெடுஞ்சாலைத்துறையினர் அறிவுறுத்தியிருந்தனர். இதன்படி பலர், கடை முன்பு போட்டிருந்த பந்தல் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி கொண்டனர்.
மேலும் பவானி-சத்தி சாலையில், ஆப்பக்கூடல் நால்ரோட்டில் சாலை நடுவில், சென்டர் மீடியன் வைக்கப்பட உள்ளதாகவும், நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.

