/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மானிய கடன் பெற்ற ஊறுகாய் நிறுவனத்தில் கலெக்டர் ஆய்வு
/
மானிய கடன் பெற்ற ஊறுகாய் நிறுவனத்தில் கலெக்டர் ஆய்வு
மானிய கடன் பெற்ற ஊறுகாய் நிறுவனத்தில் கலெக்டர் ஆய்வு
மானிய கடன் பெற்ற ஊறுகாய் நிறுவனத்தில் கலெக்டர் ஆய்வு
ADDED : ஜூன் 25, 2025 01:14 AM
ஈரோடு, ஈரோடு யூனியன் வேட்டை பெரியாம்பாளையத்தில், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்று, ராமசாமி என்பவர், ஊறுகாய் மற்றும் தொக்கு தயாரிக்கும் நிறுவனம் வைத்துள்ளார். இங்கு, 17 வகை ஊறுகாய், தொக்கு உற்பத்தி செய்கின்றனர். ஆரம்பத்தில் தினமும், 600 பாட்டில் உற்பத்தி செய்த நிலையில் தற்போது, 1,000 பாட்டில் உற்பத்தி செய்கின்றனர்.
ஏப்., மாதம், 900 ஊறுகாய் மற்றும் தொக்கு, இம்மாதம், 1,000 பாட்டில் ஊறுகாய், தொக்கு, மலேசியாவுக்கு அனுப்பி, 1.50 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் செய்துள்ளனர். நிறுவனத்தை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு செய்து, மூலப்பொருட்கள், ஊறுகாய், தொக்கு தரம், பயன்படுத்தும் காலம், உற்பத்தி முறைகளை குறித்து கேட்டறிந்தார்.