விவசாயிக்கு கொலை மிரட்டல் கலெக்டர், எஸ்.பி.,யிடம் புகார்
விவசாயிக்கு கொலை மிரட்டல் கலெக்டர், எஸ்.பி.,யிடம் புகார்
ADDED : செப் 29, 2026 05:40 AM
குளித்தலை; காற்றாலை மின்கம்பம் அமைக்க எதிர்ப்பு தெரி-வித்த விவசாயிக்கு, கொலை மிரட்டல் விடுக்கும் ஆடியோ பரவி வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி, கலெக்டர், எஸ்.பி.,யிடம் விவசாயி புகார் மனு அளித்-துள்ளார்.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே, பொரணி பகுதியில் தனியார் காற்றாலை நிறுவனத்தினர் காற்றாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வரு-கின்றனர். அதே பகுதியை சேர்ந்தவர், தி.மு.க., பிரமுகர் கணேசன். இவரது விவசாய நிலத்தை-யொட்டி, காற்றாலை மின்கம்பம் நட வந்துள்-ளனர். அப்போது கணேசன், 'என் இடத்தில் மின் கம்பம் அமைக்க கூடாது' என தெரிவித்துள்ளார். இதனால், மின்கம்பம் நடும் பணி நிறுத்தப்பட்டது.இந்நிலையில், நேற்று முன்தினம், கணேசனின் மொபைல் போனிற்கு, காற்றாலை நிறுவனத்தி-லிருந்து பேசுவதாக கூறி, சிவகங்கை மாவட்-டத்தை சேர்ந்த, தி.மு.க., பிரமுகர் முருகேசன் பேசியுள்ளார். அப்போது, 'காற்றாலை மின்கம்பம் அமைக்க விடாமல் ஏன் தடுக்கிறீர்கள். கரூ-ருக்கே வந்து உன் குடும்பத்தையும், உன்னையும் துாக்கி விடுவேன். முடிந்தால் ஆம்பளையாக இருந்தால், மின்கம்பம் நடும் இடத்திற்கு நேரில் வா? உன்னை ஒன்று இல்லாமல் செய்து-விடுவேன். நான் சிவகங்கை காரன். உன்னையும் உன் குடும்பத்தையும் அடியாட்கள் வைத்து துாக்கி, கண்டம் துண்டமாக வெட்டி விடுவேன்' என, மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கக்-கோரி, கரூர் கலெக்டர், எஸ்.பி.,யிடம் விவசாயி புகார் மனு அளித்துள்ளார்.
