/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இ.வி.எம்.,களில் பதிவுகளை அழிக்கும் பணி தொடக்கம் ஜன.,15க்குள் முடியும் என்கிறார் கலெக்டர்

ADDED : டிச 13, 2025 06:18 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிக்கான மின்-னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களும் ஈரோடு ஆர்.டி.ஓ., அலுவ-லக வளாகத்தில் பாதுகாப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன.
பாரத் எலக்ட்ரானிக் நிறுவன பொறியாளர்கள் குழு நேற்று முன்-தினம் முதல், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்தி-ரங்கள், வி.வி.பேட் ஆகியவற்றை பழுது நீக்கி, சரி பார்க்கும் பணி நடந்து வருகிறது. இப்பணியை நேற்று ஆய்வு செய்த கலெக்டர் கந்தசாமி கூறியதாவது:மாவட்ட அளவில், 2,222 ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்துவதற்-காக 5,777 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 3,582 கட்டுப்-பாட்டு இயந்திரங்கள், 3,627 வி.வி.பேட்
உள்ளன.
இவற்றில் கடந்த தேர்தல்களில் பதிவான ஓட்டுகள் இருக்கும். அவற்றை பொறியாளர்கள் அழித்து அகற்றிவிட்டு, சரியாக இயங்-குகிறதா என சோதிப்பார்கள். கருவி, பேட்டரி செயல்பாடுக-ளையும் உறுதி செய்வர்.
ஒரு பொறியாளர் ஒரு நாளைக்கு, 7 முதல், 8 இயந்திரம் வீதம் சரி பார்ப்பு பணி செய்வார். ஜன., 15க்குள் இப்பணியை நிறைவு செய்யப்படும். அதற்குள் முடிக்க இயலாத நிலையில், பிற மாவட்டங்களில் பணி முடித்த பொறியாளர்கள் வரவழைக்கப்ப-டுவர்.
இவ்வாறு கூறினார்.