/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நிரந்தரமாக இடம் மாறிய 1.68 லட்சம் வாக்காளர் விடுதலின்றி சேர்க்க முயற்சி; கலெக்டர் தகவல்
/
நிரந்தரமாக இடம் மாறிய 1.68 லட்சம் வாக்காளர் விடுதலின்றி சேர்க்க முயற்சி; கலெக்டர் தகவல்
நிரந்தரமாக இடம் மாறிய 1.68 லட்சம் வாக்காளர் விடுதலின்றி சேர்க்க முயற்சி; கலெக்டர் தகவல்
நிரந்தரமாக இடம் மாறிய 1.68 லட்சம் வாக்காளர் விடுதலின்றி சேர்க்க முயற்சி; கலெக்டர் தகவல்
ADDED : டிச 13, 2025 06:19 AM
ஈரோடு: ''ஈரோடு மாவட்ட அளவில், 1.68 லட்சம் வாக்காளர் நிரந்தரமாக இடம் மாறியவர்களாக கண்டறியப்பட்டுள்ளது,'' என கலெக்டர் கந்தசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில் உள்ள, 2,222 ஓட்டுச்சாவடிகளில், 19.97 லட்சம் வாக்காளர் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் நவ., 4 முதல் எஸ்.ஐ.ஆர்., படிவம் வழங்கி முழு அளவில் திரும்ப பெறப்பட்டது. அதில், 1.68 லட்சம் பேர் நிரந்தரமாக இடம் மாறியவர் என அறியப்பட்டுள்-ளது. இறந்தவர்கள், இரண்டு இடங்களில் வாக்காளராக உள்ளவர்-களை மட்டும் அகற்றும் பணி நடந்து வருகிறது.
மொத்த வாக்காளர், 19.97 லட்சம் பேரில், 6 சதவீதமாக, 6 லட்சம் பேர் மட்டுமே, 2002ல் எங்கிருந்தார்கள், எந்த ஓட்டுச்சா-வடியில் ஓட்டுப்பதிவு செய்தார்கள் என்ற விபரம் இல்லாமல் உள்-ளது. அவற்றையும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் நேரிலும், போனிலும் விசாரித்து, விபரத்தை சேகரித்து, வாக்காளர்களாக ஏற்கின்றனர். அவ்வாறு கண்டறிய முடியாதவர்களுக்கு, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின் படிவம்-6 வழங்கி, அதிகபட்ச ஆவணங்கள் பெறப்பட்டு இணைக்கப்படுவர்.
திரும்ப பெற்ற படிவங்களில், 2002ல் அவர்களது விபரம் முழு-மையாக உள்ளவர்களை சேர்த்தது தவிர, பிற வாக்காளர்கள் சேர்ப்பதில் உள்ள பிரச்னை விபரத்துடன், அங்கீகரிக்கப்பட்ட அர-சியல் கட்சியினருக்கு பட்டியல் வழங்கி உள்ளோம். ஓட்டுச்சா-வடி நிலை அலுவலர் போல, அவர்களும் வாக்காளரை அணுகி, விபரம் சேகரித்து இணைக்கும் முயற்சியில் உள்ளனர்.
அதேநேரம், 1,200 வாக்காளர்களுக்கு அதிகமாக உள்ள ஓட்டுச்சா-வடிகளை பிரித்து ஏற்கனவே உள்ள, 2,222 ஓட்டுச்சாவடியுடன் கூடுதலாக, 256 ஓட்டுச்சாவடிகள் அமைக்க தேர்தல் ஆணையத்-துக்கு பட்டியல் அனுப்பி உள்ளோம். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

