/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சுதந்திர தினவிழா ஏற்பாடு கலெக்டர் ஆலோசனை
/
சுதந்திர தினவிழா ஏற்பாடு கலெக்டர் ஆலோசனை
ADDED : ஆக 06, 2025 12:55 AM
ஈரோடு, சுதந்திர தினவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து, அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் ஈரோட்டில் நடந்தது. கலெக்டர் கந்தசாமி தலைமை வகித்தார்.
ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படை மைதானத்தில் ஆக.,15ல் சுதந்திர தினவிழாவில் கலெக்டர் தேசிய கொடியேற்றி, போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார். சுதந்திர போராட்ட தியாகிகள், மொழிப்போர் தியாகிகள், எல்லை காப்பாளர், அவர்களது வாரிசுதாரர்கள் கவுரவிக்கப்படுகின்றனர். அரசு துறைகளில் சிறப்பாக செயல்பட்டோருக்கு பதக்கம், சான்று வழங்குவதுடன், நலத்திட்ட உதவிகள் வழங்குவது, கலை நிகழ்ச்சி நடத்தவும் திட்டமிட்டனர்.
அங்கு தேவையான குடிநீர், துாய்மைப்பணி, கலை நிகழ்ச்சி ஏற்பாட்டுக்கு தேவையான வசதிகள் செய்து முடிக்க, உரிய அதிகாரிகளுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டது. டி.ஆர்.ஓ., சாந்தகுமார், மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயின், எஸ்.பி., சுஜாதா, கோபி சப் கலெக்டர் சிவானந்தம், பயிற்சி உதவி கலெக்டர் காஞ்சன் சவுத்ரி உட்பட பலர் பங்கேற்றனர்.