ADDED : ஜூன் 28, 2026 02:16 AM
அ நிறம் | அளவு
ஈரோடு; சென்னிமலை, அம்மாபாளையத்தை சேர்ந்த மணிகண்டன் மகள் மாரீஸ்வரி, 19; ஈரோட்டில் ஒரு கல்லுாரியில் மூன்றாமாண்டு படிக்கிறார். கல்லுாரி பஸ்சில் சென்று வருவார். கடந்த, 25ம் தேதி காலை கல்லுாரி சென்றவர் மாலையில் வீடு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அவரது தோழிகளின் வீடுகளில் தேடியும் தகவல் இல்லை. கல்லுாரி பஸ்சில் வந்தவர், திண்டலில் இறங்கிய நிலையில் மாய-மாகி விட்டதாக அளித்த புகாரின்படி, ஈரோடு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
* தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த வள்ளி மகள் நிஷா, 17; கோபி அருகே கல்லுா-ரியில், பி.ஏ., தமிழ் முதலாமாண்டு படித்தார். கடந்த, 25ல் நிஷா மாயமாகி விட்டதாக தாய் வள்ளி அளித்த புகாரின்படி கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.
