/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காமதேனு கலை கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்கம்
/
காமதேனு கலை கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்கம்
காமதேனு கலை கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்கம்
காமதேனு கலை கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்கம்
ADDED : ஜூன் 16, 2024 01:04 PM
ஈரோடு: சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவக்க விழா நடந்தது. காமதேனு கல்வி நிறுவனங்களின் நிறுவனர் பெருமாள்சாமி தலைமை வகித்தார். கல்லுாரி செயலர் அருந்ததி, இணைசெயலர் மலர் செல்வி முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் குருமூர்த்தி வரவேற்றார்.
கோவை அரசு கலை அறிவியல் கல்லுாரி உளவியல் துறை தலைவர் மற்றும் இணை பேராசிரியர் ராஜேஸ்வரி, விழாவை தொடங்கி வைத்து பேசினார். நிகழ்வில் மாணவர்களின் உளவியல் சார்ந்த சிந்தனை, தன்னம்பிக்கை, திறன்களை எவ்வாறு மேம்படுத்த வேண்டும் என்பதை, மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார். வணிகவியல் துறை தலைவர் பாரதி நன்றி கூறினார்.