/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கிராம சபை கூட்டத்தில் தலைவரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்கள்
/
கிராம சபை கூட்டத்தில் தலைவரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்கள்
கிராம சபை கூட்டத்தில் தலைவரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்கள்
கிராம சபை கூட்டத்தில் தலைவரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்கள்
ADDED : அக் 03, 2024 07:32 AM
பு.புளியம்பட்டி: பவானிசாகர் யூனியன், காவிலிபாளையம் பஞ்.,ல், கிராம சபை கூட்டம் தலைவர் முருகன் தலைமையில் கோப்பம்பாளையத்தில் நடந்தது.
கூட்டம் தொடங்கியதும் சாலை வசதி, குடிநீர் இணைப்பு, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, பலமுறை கிராம சபை கூட்டங்களில் தெரிவித்தும் எந்த நடவடிக்-கையும் எடுக்கவில்லை. காவிலிபாளையம் குளத்தில், பறவைகள் சரணாலயம் அமைப்பதற்-காக மண் திட்டுகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
'குளம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்-ளது. அது குறித்து எனக்கு தெரியாது; தீர்மானம் நிறைவேற்றவும் முடியாது' என, தலைவர் முருகன் தெரிவித்ததால் ஆவேசம் அடைந்த மக்கள் கூட்டத்தை புறக்கணித்து கோப்பம்பா-ளையம் பஸ் நிறுத்தம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளாத பொதுப்பணித்துறை அதிகா-ரிகளை கண்டித்தும், தீர்மானம் நிறைவேற்ற முடியாது என கூறிய தலைவர் முருகனை கண்-டித்தும் கோஷம் எழுப்பினர்.புன்செய்புளியம்பட்டி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும், சமாதானம் அடையாத மக்கள் அதி-காரிகள் இங்கு நேரடியாக வந்து பதில் சொல்ல வேண்டும் என்றனர். இதையடுத்து அங்கு வந்த பவானிசாகர் பி.டி.ஓ., விஜயலட்சுமி, கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்; கோரிக்கை மனுக்கள் மீதான தீர்மானங்களும் நிறைவேற்றப்படும் என, உறுதியளித்ததை தொடர்ந்து மறியலை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.

