/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஹெச்.எம்., மீது கையாடல் புகார்; ஓய்வு நாளில் விசாரணை
/
ஹெச்.எம்., மீது கையாடல் புகார்; ஓய்வு நாளில் விசாரணை
ஹெச்.எம்., மீது கையாடல் புகார்; ஓய்வு நாளில் விசாரணை
ஹெச்.எம்., மீது கையாடல் புகார்; ஓய்வு நாளில் விசாரணை
ADDED : ஜூன் 01, 2024 06:41 AM
பவானி : கையாடல் புகார் தொடர்பாக, பெண் தலைமை ஆசிரியரிடம், ஓய்வு பெறும் நாளில், கல்வித்துறை அலுவலர்கள் விசாரணை நடத்தியது, பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈரோடு மாவட்டம், பவானி மகளிர் மேல்நிலைப்பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் செந்தில்குமார். தமிழக முதல்வர் தனிப்பிரிவு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், ஈரோடு கலெக்டர், முதன்மை கல்வி அலுவலர் ஆகியோருக்கு, இவர் அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது: பள்ளி தலைமையாசிரியராக கலைச்செல்வி உள்ளார். கடந்த, 2022ல் வகுப்பறைகளில் பயன்படுத்த முடியாத, இரண்டு டன் எடை கொண்ட மர நாற்காலிகளை விற்று கையாடல் செய்துள்ளார். இதுகுறித்து மேலாண்மைக்குழு கூட்டத்தில் கேட்டபோது பதில் கூறவில்லை. இதேபோல் பள்ளி பழைய ஆவணங்களை விற்றும் மோசடி செய்துள்ளார்.
பவானி நகராட்சிக்கு செலுத்தப்படாத, 85 ஆயிரம் ரூபாய் குடிநீர் கட்டணத்தை, மாவட்ட நிர்வாகம் உடனடியாக செலுத்த நிர்ப்பந்தம் கொடுத்தது. இதற்காக பல்வேறு நிறுவனங்களில் இரண்டரை லட்சம் வசூல் செய்தார். இதில், 85 ஆயிரம் ரூபாயை கட்டிவிட்டு, மீதி தொகையை அவர் வைத்து கொண்டார். பல வகையில் கையாடல் செய்த தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தார்.இதை தொடர்ந்து பவானி மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு, மாவட்ட கல்வி அலுவலர் பெல்ராஜ், பள்ளி துணை ஆய்வாளர் நாச்சிமுத்து நேற்று வநதனர். புகார் அனுப்பிய செந்தில்குமார், தலைமையாசிரியர் கலைச்செல்வியிடம் நேரில் விசாரணை நடத்தினர். இருவரிடமும் தனித்தனியாக தன்னிலை விளக்கத்தை பெற்றுக் கொண்ட அலுவலர்கள், கலெக்டருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். புகாருக்கு ஆளான கலைச்செல்வி, நேற்றுடன் பணி நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது.