/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இயந்திரங்களை காட்டி ரூ.36 லட்சம் மோசடி மாட்டுத்தோல் வியாபாரி மீது எஸ்.பி.,யிடம் புகார்
/
இயந்திரங்களை காட்டி ரூ.36 லட்சம் மோசடி மாட்டுத்தோல் வியாபாரி மீது எஸ்.பி.,யிடம் புகார்
இயந்திரங்களை காட்டி ரூ.36 லட்சம் மோசடி மாட்டுத்தோல் வியாபாரி மீது எஸ்.பி.,யிடம் புகார்
இயந்திரங்களை காட்டி ரூ.36 லட்சம் மோசடி மாட்டுத்தோல் வியாபாரி மீது எஸ்.பி.,யிடம் புகார்
ADDED : நவ 18, 2025 01:33 AM
ஈரோடு, ஈரோடு மூலப்பட்டறை டி.எம்., எலக்ட்ரிக்கல் கடை பங்குதாரர் மூர்த்தி (எ) தட்சிணாமூர்த்தி, 48; ஈரோடு எஸ்.பி., சுஜாதாவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பழைய எலக்ட்ரிக் உபகரணங்கள், இயந்திரங்கள் உள்ளிட்ட பொருள்களை வாங்கி விற்கும் தொழிலை எனது பங்குதாரருடன் செய்கிறேன்.
ஈரோடு, சம்பத் நகர் பகுதியை சேர்ந்த மாட்டுத்தோல் வியாபாரி சரவணன், எங்களை தொடர்பு கொண்டார். சென்னம்பட்டியில் ஒரு மெட்டல் நிறுவனத்தின் சொத்து வங்கி மூலமாக ஏலத்தில் விடப்படுகிறது. அங்குள்ள ஜெனரேட்டர், கிரஷர், பில்டர், மோல்டிங் மிஷின்கள் உள்ளிட்ட இயந்திரங்களை குறைந்த விலைக்கு தருவதாக கூறினார். எங்களிடம் வங்கி ஆவணங்களை காட்டி, சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு அழைத்து சென்று இயந்திரங்களை காண்பித்து, 36 லட்சம் ரூபாய்க்கு வாங்கி தருவதாக கூறினார். இதையடுத்து ஐந்து தவணைகளில், 36.30 லட்சம் ரூபாயை கொடுத்தோம். இதையடுத்து இயந்திரங்களை எடுத்து வர நிறுவனத்துக்கு சென்றோம். அங்கு வந்த நிறுவன உரிமையாளர்கள், வங்கி ஏலம் விட்ட தொகையை செலுத்தாததால் இயந்திரங்களை கழற்ற அனுமதிக்க முடியாது என கூறினர். இதனால் போலீசில் புகார் கொடுத்து கழற்றி செல்லலாம் என்று கூறி அழைத்து வந்து விட்டார். இதுகுறித்து புகாரளித்த வெள்ளித்திருப்பூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றபோது, வங்கி கொடுத்த இறுதி ஏல விற்பனை உறுதி கடிதத்தை காட்டும்படி போலீசார் கேட்டனர். மூன்று நாட்களில் கொண்டு வந்து கொடுப்பதாக கூறியவர், அதன் பிறகு தலைமறைவாகி விட்டார். உரிய நடவடிக்கை எடுத்து, 36.30 லட்சம் ரூபாயை மீட்டுத் தர வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

