/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'ஆலைகளின் செலவில் குடிநீர்' பெருந்துறை எம்.எல்.ஏ., மனு
/
'ஆலைகளின் செலவில் குடிநீர்' பெருந்துறை எம்.எல்.ஏ., மனு
'ஆலைகளின் செலவில் குடிநீர்' பெருந்துறை எம்.எல்.ஏ., மனு
'ஆலைகளின் செலவில் குடிநீர்' பெருந்துறை எம்.எல்.ஏ., மனு
ADDED : நவ 18, 2025 01:34 AM
ஈரோடு, பெருந்துறை அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஜெயகுமார், ஈரோடு கலெக்டர் கந்தசாமியிடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:
பெருந்துறை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் குடிநீர், ஆலை கழிவுக ளால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. ஈங்கூர், வரப்பாளையம், வாய்ப்பாடி உட்பட, 31 கிராமங்களில் கைப்பம்பு, கிணறு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் எடுக்கப்பட்ட குடிநீர் மாதிரிகள் அனைத்தும், தர சோதனையில் தோல்வி அடைந்தன.
மனிதர்கள் பருகுவதற்கு தகுதியற்றதென சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. சிப்காட் ஆலைககள் அமைந்துள்ள பொன்முடி, கம்பளியம்பட்டி, பனியம்பள்ளி, புஞ்சை பாலத்தொழுவு பஞ்.,களிலும் ஆலை கழிவால் நீராதாரங்கள் கடுமையாக பாதித் துள்ளன. கடலுார் மாவட்டத்தில் இதுபோல பாதிக்கப்பட்ட பஞ்.,களுக்கு, சிப்காட் தொழிற்சாலைகளே சொந்த செலவில் கூடுதல் குடிநீர் வழங்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதை முன்னுதாரணமாக வைத்து, சிப்காட் கழிவால் பாதிக்கப்பட்ட, 35 கிராமங்களுக்கும், சிப்காட் ஆலைகளின் செலவில், காவிரி குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

