/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோழிக்கழிவு கொட்டுவதால் கடும் துர்நாற்றம் என புகார்
/
கோழிக்கழிவு கொட்டுவதால் கடும் துர்நாற்றம் என புகார்
கோழிக்கழிவு கொட்டுவதால் கடும் துர்நாற்றம் என புகார்
கோழிக்கழிவு கொட்டுவதால் கடும் துர்நாற்றம் என புகார்
ADDED : டிச 26, 2024 01:25 AM
ஈரோடு, டிச. 26--
ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு, தற்சார்பு விவசாயிகள் சங்க தலைவர் பொன்னையன் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
சென்னிமலை-காங்கேயம் சாலை, சென்னிமலை யூனியன் அலுவலகத்தில் இருந்து, சென்னி
மலை காப்புக்காட்டின் நடுவே நுழைந்து, கணுவாய் என்ற பகுதியை தாண்டி சமவெளியில் வந்து காங்கேயம் வரை செல்கிறது. இதில், சென்னிமலை யூனியன் அலுவலகம் அருகே பழைய பெட்ரோல் பங்க் இருந்த இடத்துக்கு, மேற்கு பகுதியில் கோழிக்கழிவுகளை கொண்டு வந்து, அன்றாடம் மூட்டை மூட்டையாக சாக்குகளில் சிலர் கொட்டி செல்கின்றனர்.
காப்புக்காடு பகுதியில் கெட்ட வாடை வீசுகிறது. கணுவாய் பகுதியில் சாலை ஓரத்திலேயே, மிகப்பெரிய அளவில் குப்பை மேடாய் மாற்றி வருகின்றனர். நச்சுத்தன்மை கொண்ட குப்பையை, பாலித்தீன் பைகளில் அடைத்து, போட்டு விட்டு செல்கின்றனர். குப்பையை கொட்டி செல்லும் காட்சி படங்கள் உள்ளன. எனவே, உரிய நடவடிக்கை எடுத்து, நச்சு கழிவுகளை அகற்ற வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.

