/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கணினி ஆசிரியர்கள் பொதுக்குழு கூட்டம்
/
கணினி ஆசிரியர்கள் பொதுக்குழு கூட்டம்
ADDED : ஜன 05, 2026 04:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் சங்கத்தின், ஈரோடு மாவட்ட பொதுக்குழு கூட்டம், மாநில செயலாளர் வீர-மணி தலைமையில், கோபியில் நேற்று நடந்தது.
மாவட்ட தலைவர் ஈஸ்வரமூர்த்தி வரவேற்றார். மாவட்ட செயலாளர் செல்-வராஜ் முன்னிலை வகித்தனர். கணினி பயிற்றுநர் நிலை-1 பணி-யிடத்தை, முதுகலை ஆசிரியர் கணினி அறிவியல் பணியிடமாக பெயர் மாற்றம் செய்து ஆணை வழங்க வேண்டும். மாற்றமில்லா பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும். கணினி பயிற்றுநர் நிலை-1 பதவி உயர்வு பணியிடம் சார்ந்து, ஊதியம் நிர்ணயம் செய்வதில் உள்ள பிரச்னைகளை களைந்து, அது சார்பான தெளிவுரை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்-வேறு தீர்மானம் நிறைவேற்றினர்.

