/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோவில் அருகே மதுபான விடுதி? தாராபுரத்தில் போஸ்டரில் எதிர்ப்பு
/
கோவில் அருகே மதுபான விடுதி? தாராபுரத்தில் போஸ்டரில் எதிர்ப்பு
கோவில் அருகே மதுபான விடுதி? தாராபுரத்தில் போஸ்டரில் எதிர்ப்பு
கோவில் அருகே மதுபான விடுதி? தாராபுரத்தில் போஸ்டரில் எதிர்ப்பு
ADDED : ஜன 05, 2026 04:50 AM
தாராபுரம்: தாராபுரம் ஐந்து சாலை சந்திப்பு அருகே, அமராவதி ஆற்றங்க-ரையில் பிரசித்தி பெற்ற அகஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. இதன-ருகே ரெஸ்டாரெண்ட் பெயரில் கட்டுமான பணி நடக்கிறது.
ஆனால் எப்.எல்.2 வகை மதுபான விடுதி என மக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்து மக்கள் கட்சி சார்பில், நகரின் பல்வேறு இடங்களில் நேற்று போஸ்டர் ஒட்டப்பட்டது. அதில், தமிழக அரசே, மாவட்ட நிர்வாகமே, தடை செய், தடை செய், ஈஸ்வரன் கோவில் அருகே மக்களுக்கும், போக்குவரத்-துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமையவிருக்கும் எப்.எல்.2 மனமகிழ் மன்ற மதுபான கடையை தடை செய்! மக்கள் போராட்டத்தை துாண்டாதே என்று குறிப்பிடப்பட்டிருந்-தது. சிவராத்திரி, பிரதோஷ நாட்களில், ஆயிரக்கணக்கில் பக்-தர்கள் கூடும் கோவில் அருகே, மதுக்கடை அமைப்பது சரியா? என்று, பக்தர்கள் மத்தியில் ஆவேச கேள்வி எழுந்துள்ளது.