/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சித்தோட்டில் குப்பை கிடங்கால் தொல்லை எரிப்பதால் சுவாச கோளாறு என வருத்தம்

ADDED : ஜூலை 22, 2025 01:35 AM
ஈரோடு, சித்தோடு டவுன் பஞ்., நடுப்பாளையம், யூசுப் நகர் பகுதியினர், கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கி கூறியதாவது: சித்தோடு யூசுப் நகர் பகுதியில், 1,000க்கும் மேற்பட்ட வீடு, கடைகள் உள்ளன. அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சந்தை செயல்படுகிறது.
வீடுகள் உள்ள பகுதியில் அரசு நிலத்தில் நீண்ட காலமாக குப்பை கொட்டி, தீ வைத்து எரிக்கின்றனர். வாரக்கணக்கில் புகைந்து கொண்டே இருப்பதால் கண் எரிச்சல், சுவாச பிரச்னை ஏற்படுகிறது. இயந்திரத்தில் குப்பைகளை எரித்து அகற்றும் போது கருப்பு துகள், வீடு, குடிநீரில் படிகிறது. இவ்விடத்தில் குப்பை கொட்டுவதை நிறுத்தி, குப்பை கிடங்கை நிரந்தரமாக அகற்ற வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.