/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆக்கிரமிப்புகளால் சென்னிமலை சாலைகளில் நெரிசல்
/
ஆக்கிரமிப்புகளால் சென்னிமலை சாலைகளில் நெரிசல்
ADDED : ஜூன் 18, 2024 07:17 AM
சென்னிமலை : சென்னிமலை நகர பிரதான ரோடுகளில், வாகனங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னிமலை நகரம் வளர்ந்து வரும் நகரமாக உள்ளது. பெருந்துறை ரோடு, ஈரோடு ரோடு, அரச்சலூர் ரோடு, காங்கேயம் ரோடு, நான்கு ராஜ வீதி ரோடு, ஊத்துக்குளி ரோடு பிரதான ரோடுகளாக உள்ளன. இவற்றில் எப்போதும் போக்குவரத்து அதிகரித்து காணப்படும். இவற்றின் ஓரங்களில் கடைகளின் ஆக்கிரமிப்பு, வாகனங்களின் நிறுத்தம் போன்றவை நிரந்தர பிரச்னைகளாக இருந்து வருகின்றன. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, வாகன ஓட்டுனர்கள் மற்றும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.எனவே, பிரதான ரோடுகளில் வாகனங்களின் ஆக்கிரமிப்பு, கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற போலீசாரும், பேருராட்சி அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க, மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதன் வாயிலாக போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். இதுவும் தற்காலிக தீர்வு தான், நிரந்தர தீர்வாக ரிங் ரோடு அமைக்க வேண்டும் என்பது நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.