/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வெண்டிபாளையம் ரயில்வே பாதையில் கான்கிரீட் பாலம் அமைக்கும் பணி
/
வெண்டிபாளையம் ரயில்வே பாதையில் கான்கிரீட் பாலம் அமைக்கும் பணி
வெண்டிபாளையம் ரயில்வே பாதையில் கான்கிரீட் பாலம் அமைக்கும் பணி
வெண்டிபாளையம் ரயில்வே பாதையில் கான்கிரீட் பாலம் அமைக்கும் பணி
ADDED : ஜூன் 18, 2025 01:12 AM
ஈரோடு, ஈரோடு, வெண்டிபாளையம் ரயில்வே கேட் அருகே காலிங்கராயன் வாய்க்கால் செல்கிறது. வாய்க்காலின் மீது, ஈரோடு - சென்னை ரயில் வழித்தடம் உள்ளது. காலிங்கராயன் வாய்க்காலை கடக்க பல ஆண்டுக்கு முன்னர் இரும்பால் பாலம் அமைக்கப்பட்டிருந்தது. இதை மாற்றி, வாய்க்காலின் குறுக்கே கான்கிரீட் பாலம் அமைக்க ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்திருந்தது. இதனால் சில மாதங்களுக்கு முன் வாய்க்கால் அருகிலேயே கான்கிரீட் ஸ்லாப் கட்டுமானம் செய்யப்பட்டது. பழைய இரும்பு பாலம் அகற்றப்பட்டு, வாய்க்காலின் குறுக்கே கடந்த மாதம் கான்கிரீட் பாலம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது.
அந்த பாலத்தின் மீது, புதிய ரயில் தண்டவாளங்கள், அவற்றுக்கிடையே கான்கிரீட் பாளங்கள் மற்றும் ஜல்லி கொட்டி தண்டவாளம் அமைக்கும் பணி நடந்தது. தற்போது, 95 சதவீத பணி முடிந்துள்ளது. ஓரிரு வாரங்களில் பணி முடிவடையும் என ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.