ADDED : மே 24, 2026 05:21 AM
அ நிறம் | அளவு
சத்தியமங்கலம்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகேயுள்ள காவுத்தம்பாளையத்தை சேர்ந்தவர் தங்கராசு, 63; கட்டட தொழிலாளி. இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். மூவருக்கும் திருமணமாகி விட்டது. ஓராண்டுக்கு முன் பக்கவாதம் ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சத்தியமங்கலம் அருகேயுள்ள பண்ணாரி கோவிலுக்கு வருவது வழக்கம். நேற்று முன்தினம் கோவிலுக்கு வந்தார்.
இந்நிலையில் கோவில் அருகே உள்ள வனத்துறை பூங்காவில் இறந்து கிடந்தார். சத்தி போலீசார் உடலை மீட்டு, சாவுக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
