தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர் சரிவு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர் சரிவு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர் சரிவு


UPDATED : நவ 18, 2026 07:23 PM

ADDED : நவ 18, 2026 07:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2026 07:23 PM ADDED : நவ 18, 2026 07:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புன்செய்புளியம்பட்டி: நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து சரிந்தது.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை நீர்மட்டம், 105 அடி உயரம், 32.8 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலை பகுதியில், கடந்த ஜூன் மாதம் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை, போதிய அளவில் பெய்யாததால் நீர் வரத்து குறைந்து, அணை நீர்மட்டம் வேகமாக சரிந்தது.

இந்நிலையில், நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மாவட்டத்தில், இரண்டு வாரத்துக்கு முன் பெய்த வடகிழக்கு பருவ மழையால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நீர்மட்டம், 78 அடியாக உயர்ந்தது.

தற்போது, மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து சரிந்தது. நேற்று முன்தினம் இரவு நீர்வரத்து, 2,531 கனஅடியாக இருந்த நிலையில், நேற்று மாலை, 157 கனஅடியாக சரிந்தது. நேற்று மாலை நிலவரப்படி அணை நீர்மட்டம், 78.86 அடி; நீர் இருப்பு, 15.08 டி.எம்.சி.,யாக இருந்தது.

அணையில் இருந்து அனைத்து பாசனங்களுக்கும், நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், குடிநீர் தேவைக்காக மட்டும், 100 கனஅடி நீர், கீழ்பவானி வாய்க்காலில், 5 கனஅடி என மொத்தம், 105 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us