ADDED : மே 27, 2025 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம், தாராபுரத்தில் தொடர் சாரல் மழை பெய்ததால், மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.
தாராபுரத்தில் நேற்று காலை, 6:00 மணிக்கு சாரல் மழை பெய்ய துவங்கியது. தொடர்ந்து அவ்வப்போது சிறு இடைவெளி விட்டு பெய்தபடியே இருந்தது.
மதியம், 3:00 மணிக்கு பிறகே நின்றது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர். ஆள் நடமாட்டமின்றி, சாலைகள் வெறிச்சோடின.

