/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.21.73 லட்சத்துக்குகொப்பரை தேங்காய் விற்பனை
/
ரூ.21.73 லட்சத்துக்குகொப்பரை தேங்காய் விற்பனை
ADDED : டிச 18, 2024 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, டிச. 18-
ஈரோடு மாவட்டம், எழுமாத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு, 379 மூட்டை கொப்பரை தேங்காயை விற்பனைக்கு கொண்டு வந்தனர். முதல் தரம் ஒரு கிலோ, 134.09 முதல், 143.09 ரூபாய் வரையிலும், இரண்டாம் தரம் ஒரு கிலோ, 104.89 முதல், 130.09 ரூபாய் வரையிலும் விற்பனையானது.
மொத்தம், 16 ஆயிரத்து, 826 கிலோ எடை கொண்ட கொப்பரை தேங்காய், 21 லட்சத்து, 73 ஆயிரத்து, 499 ரூபாய்க்கு விலை போனது.