/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சுகாதார பணிகளை துரிதப்படுத்த மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்
/
சுகாதார பணிகளை துரிதப்படுத்த மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்
சுகாதார பணிகளை துரிதப்படுத்த மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்
சுகாதார பணிகளை துரிதப்படுத்த மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்
ADDED : நவ 06, 2025 01:48 AM
ஈரோடு, ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நகர திட்டமிடுதல் தொடர்பான ஆலோசனை கூட்டம், ஆணையர் அர்பித்ஜெயின் தலைமையில் நேற்று நடைபெற்றது.
மாநராட்சி பகுதியில் சுகாதார நிலையங்களில் போதிய மருந்துகள் இருப்பு வைப்பு, டெங்கு தடுப்பு பணிகள், மருத்துவ முகாம், வடிகால் பராமரிப்பு, பிளீச்சிங் பவுடர் தெளிப்பு போன்ற பல்வேறு சுகாதார பணிகள் மேற்கொள்வது குறித்து அறிவுறுத்தப்பட்டது. இதேபோல், மாநகராட்சிக்கு சொந்தமான காலி இடங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது, தனியார் மனைகள், கட்டடங்களுக்கு வரி விதிப்பது, கட்டுமான அனுமதி வழங்குவது போன்ற பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் துணை ஆணையர் தனலட்சுமி உட்பட
அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.