/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பள்ளிகளுக்கிடையேயான 'நந்தா டிராபி 2025' போட்டி
/
பள்ளிகளுக்கிடையேயான 'நந்தா டிராபி 2025' போட்டி
ADDED : நவ 06, 2025 01:46 AM
ஈரோடு, ஈரோடு நந்தா கல்வி நிறுவனங்களின் சார்பில், பள்ளி மாணவர்களின் விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் பொருட்டு, மாநில அளவிலான இரண்டு நாட்கள் கொண்ட, 19 வயது உட்பட்டோருக்கான விளையாட்டு விழா, 'நந்தா டிராபி 2025' அண்மையில் நடந்தது.
நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் தலைமை வகித்தார். லீக் முறையில் நடந்த போட்டிகளை, துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் துவக்கி வைத்தார். ஆண்கள், பெண்கள் அணிகளை சார்ந்த மாணவ, -மாணவியரை நந்தா பொறியியல் கல்லுாரி முதல்
வர் ரகுபதி வரவேற்றார்.சென்னை, கடலுார், ஓசூர், ஈரோடு, நாமக்கல், திருச்செங்கோடு, கோவை, திருநெல்வேலியை சேர்ந்த அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி பள்ளிகளில் இருந்து, 120 அணிகள் கலந்து கொண்டன. துவக்க விழாவில் நந்தா கல்வி அறக்கட்டளை அங்கத்தினர் பானுமதி சண்முகன் மற்றும் செயலர் நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் திருமூர்த்தி, முதன்மை கல்வி அதிகாரி ஆறுமுகம், நந்தா தொழல்நுட்ப வளாக நிர்வாக அலுவலர் வேலுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழா முடிவில் ஓவ்வொரு போட்டியிலும், முதல் மூன்று இடங்களை பெற்ற பள்ளிகளின் அணிகளுக்கு, ஈரோடு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் அலுவலர் சதீஸ்குமார் விருது, பரிசுகளை வழங்கினார்.
நந்தா தொழில்நுட்ப கல்லுாரிமுதல்வரும், நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளருமான முதல்வர் நந்தகோபால் நன்றி கூறினார்.

