/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தெரு நாய்களை வலை வீசி பிடித்த மாநகராட்சி ஊழியர்கள்
/
தெரு நாய்களை வலை வீசி பிடித்த மாநகராட்சி ஊழியர்கள்
தெரு நாய்களை வலை வீசி பிடித்த மாநகராட்சி ஊழியர்கள்
தெரு நாய்களை வலை வீசி பிடித்த மாநகராட்சி ஊழியர்கள்
ADDED : டிச 05, 2024 07:30 AM
ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில், தெரு நாய்கள் தொல்லையால் பொது-மக்கள் பாதிக்கப்பட்டு வருவதாக எழுந்த புகார்படி, 10க்கும் மேற்பட்ட நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் வலை வீசி பிடித்-தனர். ஈரோடு மாநகராட்சி, 10வது வார்டுக்கு உட்பட்ட வில்லரசம்-பட்டி, கே.ஏ.எஸ். நகர், சத்யா நகர், இந்திரா நகர்
உள்ளிட்ட பல்-வேறு பகுதிகளில், தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வரு-கின்றன. கடந்த ஆறு மாதங்களில், 20க்கும் மேற்பட்ட ஆடுகள், 25க்கும் மேற்பட்ட நாட்டுக் கோழிகள், ஒரு பசு ஆகியவற்றை
தெரு நாய்கள் கடித்து குதறியுள்ளன. இதுகுறித்து கடந்த மாநகராட்சி கூட்டத்தில், தெரு நாய்கள் தொல்-லையை கட்டுப்படுத்த வேண்டும் என, 10வது
வார்டு கவுன்சிலர் குமரவேல் வலியுறுத்தியிருந்தார். அதன் அடிப்படையில் நேற்று, 10க்கும் மேற்பட்ட தெரு
நாய்களை, மாநகராட்சி ஊழியர்கள் வலை வீசி பிடித்தனர். பின்னர், சோலாரில் உள்ள கருத்தடை அறுவை சிகிச்சை
மையத்துக்கு நாய்கள் கொண்டு செல்லப்பட்-டன.