/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வீசப்பட்ட மாத்திரை' மாநகராட்சி விளக்கம்
/
வீசப்பட்ட மாத்திரை' மாநகராட்சி விளக்கம்
ADDED : நவ 29, 2024 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீசப்பட்ட மாத்திரை'
மாநகராட்சி விளக்கம்
ஈரோடு, நவ. 29-
ஈரோட்டில் தெப்பக்குளம் தெருவில், சில நாட்களுக்கு முன், வளரிளம் பருவத்தினருக்கான காலாவதியாகாத இரும்பு சத்து மாத்திரைகள் சாலையோரம் வீசப்பட்டிருந்தன. தாய்சேய் நல அலுவலர், சுகாதார ஆய்வாளர்கள் பறிமுதல் செய்து விசாரித்தனர்.
மாத்திரையில் குறிப்பிட்டுள்ள 'பேட்ஜ் எண்கள்', மாநகராட்சி பகுதி மற்றும் மாவட்டத்துக்கு வழங்கப்பட்டவை அல்ல என தெரிய வந்துள்ளதாக, மாநகர நல அலுவலர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

