/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு கலை கல்லுாரியில் ஆடை அலங்கார போட்டி
/
ஈரோடு கலை கல்லுாரியில் ஆடை அலங்கார போட்டி
ADDED : மார் 07, 2025 07:31 AM
ஈரோடு : ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், ஆடை அலங்காரம் மற்றும் வடிவமைப்பு துறை சார்பாக, கல்லுாரிகளுக்கு இடையே போட்டி நடந்தது.
கல்லுாரி தாளாளர் கே.கே.பாலுசாமி தலைமையுரை வழங்கினார். கல்லுாரி முதல்வர் சங்கரசுப்பிரமணியன், இயக்குனர் வெங்கடாசலம் வாழ்த்துரை வழங்கினர். மாடல் மற்றும் நடன இயக்குனர் பிரவீன், மாடலிங் தீபக், ஆடை வடிவமைப்பாளர் நவீனா ஆகியோர், போட்டி நடுவராக இருந்தனர். தனி நடனம், குழு நடனம், புகைப்படம் எடுத்தல், மெஹந்தி எனத் தனித் தனியாக பல்வேறு போட்டிகளில், 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். அதிக போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தனிப்பரிசு வழங்கப்பட்டது. ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை சங்ககிரி விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லுாரிக்கு கிடைத்தது.