/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கல்வித்துறை அலுவலர்களுக்கு வரும் 26ல் கலந்தாய்வு துவக்கம்
/
கல்வித்துறை அலுவலர்களுக்கு வரும் 26ல் கலந்தாய்வு துவக்கம்
கல்வித்துறை அலுவலர்களுக்கு வரும் 26ல் கலந்தாய்வு துவக்கம்
கல்வித்துறை அலுவலர்களுக்கு வரும் 26ல் கலந்தாய்வு துவக்கம்
ADDED : மே 22, 2025 01:41 AM
ஈரோடு பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் அலுவலர்களுக்கு வரும், 26ல் கலந்தாய்வு துவங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பள்ளி கல்வித்துறையில், முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம், அரசு பள்ளிகளில் அமைச்சு பணியாளர்கள் (அலுவலர்கள் ) பல்வேறு நிலைகளில் பணியாற்றி வருகின்றனர். இதில் மூன்று ஆண்டுகளுக்கு மேல், ஒரே இடத்தில் பணியாற்றுபவர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு வரும், 26ல் துவங்குகிறது. இதன் பின் தன் விருப்ப பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் கலந்தாய்வு நடக்க உள்ளது. ஏற்பாடுகளை பள்ளி கல்வித்துறையினர் செய்து வருகின்றனர். மூன்று ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றி வரும் அலுவலர்கள் குறித்த பட்டியலை, பள்ளி கல்வித் துறையினர் சேகரித்து உள்ளனர். கலந்தாய்வில் பங்கேற்க உள்ளவர்கள், மொத்த பணியிடம் உள்ளிட்ட விபரங்கள், கலந்தாய்வில் பங்கேற்பவர்களுக்கு தெரிவிக்கப்படும். மூன்று ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றி கலந்தாய்வில் பங்கேற்காதவர்களும், கட்டாயம் பணியிட மாற்றம் செய்யப்படுவர் என பள்ளி கல்வித் துறையினர் தெரிவித்தனர்.