ADDED : ஜூன் 16, 2025 03:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு ரேக்ளா அசோசியேஷன் சார்பில், 19ம் ஆண்டு ரேக்ளா போட்டி லக்காபுரத்தில் நேற்று நடந்தது.
பெரிய குதிரை, சின்ன குதிரை, பெரிய மாடு, சின்ன மாடு, புதிய குதிரை பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. பெரிய மாடு ரேக்ளா போட்டியை, எம்.பி., பிரகாஷ் துவக்கி வைத்தார். இதில் லக்காபுரம் முனு-சாமி மாடு முதலிடம் பிடித்தது.
பெரிய குதிரை போட்டியை அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணி துவக்கி வைத்தார். இதில் அன்னுார் மூர்த்தி குதிரை முதலிடம், முள்ளாம்பரப்பு குமார் குதிரை 2ம் இடம், ஈரோடு மரப்பாலம் ஸ்ரீதர் குதிரை மூன்றாமிடம் பிடித்தது. சின்ன மாடு ரேக்ளா போட்டியை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராம-லிங்கம் துவக்கி வைத்தார்.