ADDED : ஏப் 27, 2025 04:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை: சென்னிமலை அருகே பாலதொழுவு, கரட்டுப்பாளையத்தில் முருகாத்தாள் தோட்டத்தில் நேற்று மதியம் மேய்ந்து கொண்டிருந்த ஒரு சினை பசுமாடு, எதிர்பாராதவிதமாக கிணற்றில் விழுந்து விட்டது.
இதுகுறித்து சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தரப்பட்டது. அங்கு சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி கயிறு கட்டி மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சினை பசு என்பதால் சிக்கல் ஏற்பட்டது. இதனால் கிரேன் வரவழைக்கப்பட்டு அதன் உதவியுடன் மூன்று மணி நேர போராட்டத்துக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டது.

