/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கத்தினர் உண்ணாவிரதம்
/
சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கத்தினர் உண்ணாவிரதம்
ADDED : அக் 25, 2024 01:00 AM
சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கத்தினர் உண்ணாவிரதம்
ஈரோடு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டமான சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கத்தினர் சார்பில், ஈரோடு தாலுகா அலுவலகம் முன் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கனிமொழி தலைமை வகித்தார். மாவட்ட ஒரங்கிணைப்பாளர் கவிதா மணி வரவேற்றார். தேசிய ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் கந்தசாமி, உண்ணாவிரதத்தை துவக்கி வைத்தார். நிர்வாகிகள் ராஜசேகர், உஷாராணி, கார்த்தி, வெங்கடேஷ், ஜனார்த்தனன் உட்பட பலர் கோரிக்கை குறித்து பேசினர்.
தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதி எண்-309 ன் படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்க வேண்டும். கடந்தாண்டு நிதியமைச்சர் அறிவித்தபடி, தமிழகத்துக்கு பொருத்தமான ஓய்வூதிய திட்டத்தை அமலாக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் சாமிகுணம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கராஜ் நன்றி கூறினார்.