/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விபத்து, ஒலி, மாசற்ற தீபாவளி கொண்டாட கலெக்டர் வேண்டுகோள்
/
விபத்து, ஒலி, மாசற்ற தீபாவளி கொண்டாட கலெக்டர் வேண்டுகோள்
விபத்து, ஒலி, மாசற்ற தீபாவளி கொண்டாட கலெக்டர் வேண்டுகோள்
விபத்து, ஒலி, மாசற்ற தீபாவளி கொண்டாட கலெக்டர் வேண்டுகோள்
ADDED : அக் 19, 2024 01:17 AM
விபத்து, ஒலி, மாசற்ற தீபாவளி
கொண்டாட கலெக்டர் வேண்டுகோள்
ஈரோடு, அக். 19-
ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட அறிக்கை: தீபாவளியில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். பட்டாசு வெடிப்பதால் நிலம், நீர், காற்று மாசுபடுகிறது. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிக ஒலி, காற்று மாசால் சிறு குழந்தைகள், பெரியோர், நோய் பாதித்தோர் மனதளவில் பாதிப்பர்.
நீதிமன்ற வழிகாட்டுதல்படியான மூலப்பொருட்களை பயன்படுத்தியே பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும். வருங்காலத்தில் பசுமை பட்டாசுகளையே உற்பத்தி செய்து விற்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது.
தீபாவளி அன்று காலை, 6:00 முதல், 7:00 மணி வரையும், இரவு, 7:00 முதல், 8:00 மணி வரையும் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க நேரம் நிர்ணயித்து, அனுமதி வழங்கி உள்ளது. பிறருக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பின்றி பட்டாசு வெடிக்க வேண்டும்.
மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்பு அனுமதி பெற்று, பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி பட்டாசுகளை வெடிக்கலாம். அதிக ஒலி எழுப்பும் பட்டாசு, தொடர்ந்து வெடிக்கும் சரவெடிகளை தவிர்க்க வேண்டும். மருத்துவமனை, வழிபாட்டு தலம், அமைதி காக்கப்படும் இடங்கள், குடிசை பகுதிகள், எளிதில் தீப்பற்றறும் இடங்களில் பட்டாசு வெடிக்கக்கூடாது. இவ்வாறு கூறியுள்ளார்.