ADDED : டிச 13, 2025 06:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்:பர்கூர் மலையில் தமிழக-கர்நாடக எல்லையில் குட்டையூர் கிராமம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒரு யானை, கிராமத்தில் புகுந்து பயிர்களை மிதித்தும், சாப்பிட்டும் சேதப்படுத்தியது. தீப்பந்தத்தை காட்-டியும், பட்டாசு வெடித்தும், ஒரு மணி நேரம் போராடி விவசா-யிகள் விரட்டினர்.
இதேபோல் வேலம்பட்டி, மட்டி மரத்தள்ளியிலும் யானை நட-மாட்டம் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். தட்ட-கரை வனத்துறையினர் யானையை விரட்டினாலும், யானைகள் புகுவதை தடுக்க முடியவில்லை என தெரிவிக்கின்றனர்.

