தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பயிர் காப்பீடு; தேதி வெளியீடு

பயிர் காப்பீடு; தேதி வெளியீடு

பயிர் காப்பீடு; தேதி வெளியீடு


ADDED : ஜூலை 08, 2026 05:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2026 05:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம், ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

நடப்பு காரிப் பருவத்தில் மக்காசோளம், துவரை, நிலக்கடலை, ராகி, எள், வாழை, மரவள்ளி, வெங்காயம், மஞ்சள், உருளை ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்ய பிர்கா அளவில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. மக்காசோளம் ஒரு ஏக்கருக்கு, 740 ரூபாய், துவரை-374, நிலக்கடலை-678, ராகி - 250, எள் - 312 ரூபாய் என காப்பீடு கட்டணம் செலுத்த வேண்டும். வாழை ஏக்கருக்கு - 5,045 ரூபாய், மரவள்ளி - 2,005, வெங்காயம்-2,290, மஞ்சள்-4,750, உருளை கிழங்கு- 1,667 ரூபாய் காப்பீடு கட்டணம் செலுத்த வேண்டும்வெங்காயம், உருளை கிழங்கு பயிருக்கு ஆக., 31, வாழை, மஞ்சள், மரவள்ளிக்கு செப்., 15, மக்காசோளம், துவரை, நிலக்கடலை, ராகி, எள் பயிருக்கு செப்., 16 காப்பீடு செய்ய கடைசி நாளாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us