/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரயில்வே நுழைவு பாலத்தில் சிக்கிய வாகனத்தால் பாதிப்பு
/
ரயில்வே நுழைவு பாலத்தில் சிக்கிய வாகனத்தால் பாதிப்பு
ரயில்வே நுழைவு பாலத்தில் சிக்கிய வாகனத்தால் பாதிப்பு
ரயில்வே நுழைவு பாலத்தில் சிக்கிய வாகனத்தால் பாதிப்பு
ADDED : செப் 27, 2025 01:12 AM
ஈரோடு, ஈரோடு கொல்லம்பாளையத்தில் ரயில்வே நுழைவுப்பாலம் உள்ளது. இவ்வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. கீழ் பாலத்தில் மழைநீர் தேங்காதவாறு வடிகால் கட்டி அதன் மீது இரும்பு தகடு பொருத்தப்பட்டது. ஆனால் தகடுகள் கான்கிரீட் பூச்சுடன் பொருந்தாமல், அடிக்கடி பெயர்ந்து பழுதாவது வாடிக்கையாக உள்ளது.
சில மாதத்துக்கு முன் ஏற்பட்ட பழுதால், ஒரு மாதத்துக்கு சாலையில் போக்குவரத்தை நிறுத்தி பணி செய்தனர். அதன் பிறகும் இரும்பு தகட்டில் வாகனங்கள் சிக்கி, போக்குவரத்து பாதிப்பது தொடர்கிறது. தக்காளி லோடு ஏற்றிய மினி சரக்கு வாகனம், நுழைவு பால வடிகாலில் நேற்று காலை சிக்கியது. இதனால் மற்ற வாகனங்கள் சாலையில் அணி
வகுத்து நின்றன. டிரைவர்கள் சிலர் உதவியுடன் அரை மணி நேர போராட்டத்துக்கு பிறகு வாகனம் மீட்கப்பட்டது.