/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மலைத்தேனீக்கள் கூடு கட்டியிருப்பதால் ஆபத்து
/
மலைத்தேனீக்கள் கூடு கட்டியிருப்பதால் ஆபத்து
ADDED : ஜூன் 20, 2024 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி : கோபி, வடக்கு பார்க் வீதியில் உள்ள பூங்காவின் மேல்நிலை தொட்டியில் மலைத்தேனீக்கள் கூடு கட்டியுள்ளதால் ஆபத்து காத்திருக்கிறது.கோபி, வடக்கு பார்க் வீதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான பூங்காவில், மேல்நிலைத்தொட்டி உள்ளது.
உயரமான மேல்நிலைத் தொட்டியின் அடிப்பகுதியில், மலைத்தேனீக்கள் கூடு கட்டியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில், மலைத்தேனீக்கள் கூடு கலைந்தால், அதன் பூச்சிகள் பலரை பதம் பார்க்கும் வாய்ப்புள்ளது. எனவே, ஆபத்து நடக்கும் முன், அந்த மலைத்தேனீக்களின் கூட்டை அழிக்க, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.