/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மகளின் குடும்ப வாழ்க்கை: கவலையில் தந்தை விபரீதம்
/
மகளின் குடும்ப வாழ்க்கை: கவலையில் தந்தை விபரீதம்
ADDED : டிச 26, 2025 05:16 AM
பவானி: பவானி அருகே எலவமலை, சின்னநாயக்கனுாரை சேர்ந்தவர் பழ-னிசாமி, 54; அதே பகுதியில் பேக்கரி நடத்தி வந்தார். இவரின் மகளுக்கு உறவினருடன் திருமணமாகி கருத்து வேறுபாட்டால் பிரிந்தார். பெற்றோருடன் வசித்த நிலையில் இரண்டாவது திரு-மணம் நடந்தது.
ஆனாலும், மகளின் குடும்ப வாழ்க்கையில் பிரச்னை ஏற்ப்ட்டுள்-ளது. இதனால் மனவேதனையில் இருந்த பழனிசாமி, பேக்கரி குடோனில் நேற்று முன்தினம் மாலை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்தோடு போலீசார் உடலை கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரிக்கு அனுப்பி வைத்தனர். மகளின் இரண்டாவது திருமண வாழ்க்கையும் பிரச்னையாக இருந்த மனவேதனையில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்-டிருக்கலாம் என்று, போலீசார் தெரிவித்தனர்.

