/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தான்தோன்றியம்மன் கோவில் குண்டம் விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர்

ADDED : டிச 26, 2025 05:16 AM

கோபி: கோபி அருகே மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவிலில் நடப்-பாண்டு குண்டம் விழா, நேற்று காலை, 8:10 மணிக்கு நடந்தது. குண்டத்துக்கு சிறப்பு பூஜை செய்து தலைமை பூசாரி நடராஜ் முதலில் இறங்கினார். இதை தொடர்ந்து பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்த தொடங்கினர்.
முன்னதாக குண்டத்துக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு தீ மூட்டி, அதிகாலை, 3:00 மணிக்கு அம்மை அழைத்தல் நடந்தது. காலை, 7:40 மணிக்கு குண்டம் தயாரான பிறகு, 7:45 மணிக்கு, அம்மன் சிம்ம வாகனத்தில் குண்டத்தின் முன் எழுந்தருளினார். இதையடுத்து, 8:05 மணிக்கு கொடி ஏற்றப்பட்டு, தலைமை பூசாரி நடராஜ், 8:10 மணிக்கு முதலில் குண்டம் இறங்கினார். அவரை தொடர்ந்து, கோவில் முக்கியஸ்தர்கள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, ஆயிரக்கணக்கான பக்தர்கள், 11:20 மணி வரை தீ மிதித்தனர்.