/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இன்று மாலைக்குள் மாநகராட்சி பகுதியில்கொடி கம்பங்களை அகற்ற கெடு விதிப்பு
/
இன்று மாலைக்குள் மாநகராட்சி பகுதியில்கொடி கம்பங்களை அகற்ற கெடு விதிப்பு
இன்று மாலைக்குள் மாநகராட்சி பகுதியில்கொடி கம்பங்களை அகற்ற கெடு விதிப்பு
இன்று மாலைக்குள் மாநகராட்சி பகுதியில்கொடி கம்பங்களை அகற்ற கெடு விதிப்பு
ADDED : ஏப் 20, 2025 01:22 AM
ஈரோடு:மாநகராட்சி பகுதிகளில் உள்ள கொடிக்கம்பங்களை இன்று மாலைக்குள் அகற்ற, அரசியல் கட்சியினருக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பொது இடங்களில் உள்ள, அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்களை ஏப்., 21க்குள் அகற்ற, தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி ஈரோடு மாநகர பகுதியில் அனைத்து அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற, மாநகராட்சி நிர்வாகம் கடிதம் அனுப்பியது. இதை ஏற்று தி.மு.க., சார்பில், 60 வார்டுகளிலும் உள்ள கட்சி கொடிக்கம்பங்களை அகற்றி வருகின்றனர். நாளையுடன் கெடு முடிகிறது. எனவே மாநகராட்சி பகுதிகளில் கொடி கம்பங்களை இன்று மாலைக்குள், சம்பந்தப்பட்டவர்கள் அகற்றி கொள்ள மாநகராட்சி நிர்வாகம் கெடு விதித்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி நகர திட்டமிடுனர் அலுவலர் செந்தில் பாஸ்கர் கூறியதாவது: மாநகராட்சி பகுதியில் அரசியல் கட்சி கொடி கம்பங்கள், 396, மதம் சார்ந்த கம்பங்கள், 12, ஜாதி சார்ந்து, 2, பிற இனங்கள் 7, பில்லருடன் வைக்கப்பட்டுள்ள, ௪௦ கொடி கம்பங்கள் என, 457 கொடி கம்பங்கள் உள்ளன. இவற்றை, ௨௦ம் தேதி (இன்று) மாலைக்குள் அகற்றி கொள்ள வேண்டும். இல்லையேல் மாநகராட்சி சார்பில் அகற்றப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம், கொடி கம்பம் அகற்றுவதற்கான செலவையும் வசூலிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.