/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.55 லட்சத்தில் மேஜை, நாற்காலி வாங்க முடிவு
/
ரூ.55 லட்சத்தில் மேஜை, நாற்காலி வாங்க முடிவு
ADDED : நவ 09, 2025 04:52 AM
ஈரோடு:ஈரோடு
கருங்கல்பாளையம் காமராஜ் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்,
மின்னணு நுாலகம், உயர்கல்விக்கான நுழைவு தேர்வு பயிற்சி மையம்,
வேலைவாய்ப்பு, போட்டி தேர்வுக்கான பயிற்சி, தொழில் நுட்ப திறன்
மேம்பாட்டு பயிற்சி மையம் போன்ற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அரசுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன் பெறும் வகையில் இளைஞர்
மேம்பாட்டு மையம் உள்ளது. ஆனால் மையத்துக்கு போதிய மேஜை, நாற்காலி
இல்லை. இதற்காக மாநகராட்சி நிர்வாகத்துக்கு மக்கள் கோரிக்கை
விடுத்திருந்தனர். மாமன்ற கூட்டங்களில் கவுன்சிலர்களுக்கும்
வலியுறுத்தியிருந்தனர். இந்நிலையில் இளைஞர் மேம்பாட்டு மைய
கட்டடத்துக்கு, 55 லட்சம் ரூபாய் மதிப்பில் மேஜை, நாற்காலி வாங்க
மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

