/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கரும்புக்கு வருவாய் பங்கீட்டு முறை தொகை சட்டத்தை நீக்க வலியுறுத்தல்
/
கரும்புக்கு வருவாய் பங்கீட்டு முறை தொகை சட்டத்தை நீக்க வலியுறுத்தல்
கரும்புக்கு வருவாய் பங்கீட்டு முறை தொகை சட்டத்தை நீக்க வலியுறுத்தல்
கரும்புக்கு வருவாய் பங்கீட்டு முறை தொகை சட்டத்தை நீக்க வலியுறுத்தல்
ADDED : அக் 23, 2024 01:53 AM
கரும்புக்கு வருவாய் பங்கீட்டு முறை
தொகை சட்டத்தை நீக்க வலியுறுத்தல்
ஈரோடு, அக். 23-
தமிழக அரசு கரும்பு டன்னுக்கு, 215 ரூபாய் ஊக்கத்தொகை அறிவித்ததை வரவேற்கும் நிலையில், பங்கீட்டு முறையில் கரும்புக்கான தொகை சட்டத்தை ரத்து செய்து, தேர்தல் வாக்குறுதிப்படி கரும்பு விலையை அறிவிக்க, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுபற்றி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் முனுசாமி கூறியதாவது: தமிழக அரசு, கரும்பு டன்னுக்கு, 215 ரூபாய் வீதம் ஊக்கத்தொகையை அறிவித்து, 247 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ததை வரவேற்கிறோம்.
முன்பு, ஒவ்வொரு ஆண்டும் அரவை பருவத்தின்போது குறிப்பிட்ட விலையை மத்திய அரசு அறிவிக்கும். மாநில அரசு, அதை உயர்த்தி அறிவித்து வழங்கும். கடந்த, 2017-18ல் ரங்கராஜன் குழு பரிந்துரைப்படி, விலை அறிவிப்பை நிறுத்திவிட்டு, வருவாய் பங்கீட்டு முறையில் ஆலையும், கரும்பு விவசாயிகளும் வருவாயை பிரித்து கொள்ள அறிவித்தது.
இதை பா.ஜ., ஆளும், ஹரியானா, உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்கள் கூட ஏற்கவில்லை. ஆலை நிர்வாகம் சரியாக கணக்கு காட்டாமல், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் என புறந்தள்ளியது. ஆனால், 2018 பிப்.,ல் அப்போதைய அ.தி.மு.க., அரசு வருவாய் பங்கீட்டு முறையை சட்டமாக இயற்றி அறிவித்தது.
இதில், கரும்பு அரவை பருவத்தில் கிடைக்கும் வருவாயில், 70 சதவீதம் விவசாயிகளுக்கும், 30 சதவீதம் ஆலை நிர்வாகத்துக்கும் ஒதுக்கப்படும். கரும்பு சர்க்கரை தவிர, மொலாசஸ், எரிசாராயம், அரவையில் கிடைக்கும் பிற பொருட்கள் ஆலை நிர்வாகத்துக்கானது என உள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் அடுத்தடுத்த ஆண்டுகளில் கரும்பு விலையை அறிவிக்கவில்லை.
அதேநேரம், தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில், கரும்பு டன்னுக்கு, 4,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது. மூன்றாண்டுகள் ஆகியும் நிறைவேற்றாத நிலையில், விவசாயிகள் தரப்பில், 5,500 ரூபாய் கோருகின்றனர். அதை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
அத்துடன் வருவாய் பங்கீட்டு முறை சட்டத்தை ரத்து செய்து, முன்பு போல விலையை உயர்த்தி அறிவித்து, ஊக்கத்தொகையும் வழங்க வேண்டும். இவற்றை செயல்படுத்தாததால், தமிழகத்தில், 3 லட்சம் ஏக்கருக்கு மேல் கரும்பு சாகுபடி செய்த நிலை மாறி நடப்பாண்டில், 93,000 ெஹக்டேர் மட்டுமே கரும்பு சாகுபடியாகி உள்ளது. இவ்வாறு கூறினார்.
உள்ளூர் வர்த்தக செய்திகள்
* ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், நேற்று நடந்த ஏலத்துக்கு, 6,280 தேங்காய் வரத்தானது. ஒரு கிலோ, 29.05 ரூபாய் முதல் 41.20 ரூபாய் வரை விலை போனது. இதேபோல் கொப்பரை தேங்காய், 777 மூட்டை வந்தது. முதல் தரம் கிலோ, 11௬ ரூபாய் முதல் 122.49 ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 89.79 ரூபாய் முதல் 119 ரூபாய் வரை விற்றது.
* அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், நேற்று நடந்த ஏலத்துக்கு, 7,௦௦௦ தேங்காய் வரத்தாகி, கிலோ, 34.47 - 41.27 ரூபாய்; தேங்காய் பருப்பு, 10 மூட்டைள் வரத்தாகி கிலோ, 112.49 - 121.69 ரூபாய்; பருத்தி, 419 மூட்டை வரத்தாகி, கிலோ, 68.16 - 72.56 ரூபாய்க்கு விற்றது.
* எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 1,245 மூட்டை கொப்பரை தேங்காயை விவசாயிகள் கொண்டு வந்தனர். முதல் தரம் கிலோ, 107.05 ரூபாய் முதல், 129.09 ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 90.49 ரூபாய் முதல், 119.39 ரூபாய் வரை, 58,171 கிலோ கொப்பரை, 65.௫௨ லட்சம் ரூபாய்க்கு விற்றது.
* சென்னிமலையை அடுத்த வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது. மொத்தம், 1,470 தேங்காய் வரத்தானது. ஒரு கிலோ, 39.௮௫ ரூபாய் முதல், 41.௨௨ ரூபாய் வரை ஏலம் போனது.
* அம்மாபேட்டை அருகே பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 1,376 தேங்காய் வரத்தானது. ஒரு காய், 12 ரூபாய் முதல் 24 ரூபாய்க்கு விற்றது. ஐந்து மூட்டை நெல் வரத்தாகி ஒரு கிலோ, 19 ரூபாய்; 61 மூட்டை தேங்காய் பருப்பு வரத்தாகி கிலோ, 96 ரூபாய் முதல் 123 ரூபாய்; 27 மூட்டை மக்காச்சோளம் வரத்தாகி கிலோ, 19 ரூபாய் முதல் 20 ரூபாய்க்கும் விற்றது.

