ADDED : அக் 17, 2026 07:02 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:எஸ்.ஐ.ஆர்.,
என்ற பெயரில், 13.80 கோடி வாக்காளர்களின் வாக்குரிமையை இந்திய
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பறித்துள்ளார்.
எனவே அவர் பதவி
விலக வேண்டும் என்று கூறி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில செயற்குழு
உறுப்பினர் அரவிந்தசாமி தலைமையில் ஊர்வலமாக சென்று, ஈரோடு காளை
மாட்டு சிலை அருகேயுள்ள ரயில்வே ஸ்டேஷனில், நேற்று ரயில் மறியலில்
ஈடுபட முயன்றனர். டவுன் டி.எஸ்.பி., முத்துகுமார் தலைமையிலான
போலீசார் தடுத்து, ஒரு பெண் உட்பட, 18 பேரை கைது செய்தனர்.
