ADDED : அக் 17, 2026 07:01 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில் கல்லுாரி
மாணவ, மாணவியர் பங்கேற்ற மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டி, ஈரோடு
கலெக்டர் அலுவலக வளாகத்தில் துவங்கியது.
கலெக்டர் கந்தசாமி
போட்டியை துவக்கி வைத்தார். எய்ட்ஸ் விழிப்புணர்வுக்கான பதாகைகளை
ஏந்தி சென்றனர். திண்டல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாரத்தானை நிறைவு
செய்தனர். பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த, 350 பேர் பங்கேற்றனர்.
முதல் மூன்று பரிசாக, 10,000 ரூபாய், 7,000 ரூபாய், 5,000 ரூபாய், ஆறுதல்
பரிசாக ஏழு பேருக்கு தலா, 1,000 ரூபாய் வழங்கினர்.
