ADDED : அக் 17, 2026 07:01 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில்
ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமை தனியார் துறை
வேலைவாய்ப்பு முகாம் நடந்து வருகிறது.
இதன்படி வரும், 23ம் தேதி
காலை, 10:00 முதல் மதியம், 3:00 மணி வரை முகாம் நடக்க உள்ளது. பல்வேறு
தனியார் துறை வேலையளிப்பவர்கள் பங்கேற்று, தேவையான எழுதப்படிக்க
தெரிந்த நபர்கள், பட்டதாரிகள், செவிலியர்கள், டெய்லர்கள், கணினி
இயக்குவோர், ஓட்டுனர் உட்பட பல்வேறு பணிகளுக்கு ஆட்களை தேர்வு
செய்கின்றனர். கூடுதல் விபரத்தை, 86754 12356, 94990 55942 என்ற எண்ணில்
அறியலாம்.
