/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பீடி தொழிலாளருக்கு ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தல்
/
பீடி தொழிலாளருக்கு ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தல்
ADDED : ஏப் 07, 2025 02:13 AM
ஈரோடு: தமிழ்நாடு பீடி, சுருட்டு மற்றும் புகையிலை தொழிலாளர் சம்மே-ளனம் - ஏ.ஐ.டி.யு.சி.,யின் மாநில பொதுக்குழு கூட்டம் மாநில பொருளாளர் சின்னசாமி தலைமையில் ஈரோட்டில் நடந்தது. பொது செயலாளர் காசிவிஸ்வநாதன் அறிக்கை படித்தார். சம்மே-ளன தலைவராக வேலுார் தேவதாஸ் தேர்வு செய்யப்பட்டார்.
தமிழகத்தில் பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு, 2022 மே, 10ல் ஏற்பட்ட ஊதிய உயர்வு ஒப்பந்தம் வரும் மே, 9ல் நிறைவடைகி-றது. புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்த, ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கை இறுதி செய்யப்பட்டது. பீடி சுற்றும் தொழிலா-ளர்களுக்கு, 1,000 பீடிகளுக்கு, 400 ரூபாய் வழங்க வேண்டும். நுகர்வோர் விலைவாசி குறியீட்டு எண்-3384 புள்ளிகளுக்கு மேல், புள்ளி ஒன்றுக்கு, 0.10 காசு வீதம் கணக்கிட்டு அகவிலைப்-படி வழங்க வேண்டும்.பீடி சுற்றும் தொழிலாளர் அல்லாத மற்றவர்களுக்கு, தற்போதைய ஊதியத்தில், 50 சதவீத உயர்வு வழங்க வேண்டும். வருடாந்திர போனஸாக பேலன்ஸ் ஷீட் அடிப்படையில், 40 சதவீதம் வழங்க வேண்டும். பீடி தொழிலுக்கு மத்திய அரசின் ஜி.எஸ்.டி., வரியை, 28 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறைக்க வேண்டும். தினமும், 1,500 பீடிகள் சுற்றுவதற்கு தேவையான இலை, துாள் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மா-னங்கள் நிறைவேற்றப்பட்டன. இதுபற்றி விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி செய்ய முடிவு செய்தனர்.

