/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சாயக்கழிவு அதிகரிப்பால் சி.இ.டி.பி., அமைக்க வலியுறுத்தல்
/
சாயக்கழிவு அதிகரிப்பால் சி.இ.டி.பி., அமைக்க வலியுறுத்தல்
சாயக்கழிவு அதிகரிப்பால் சி.இ.டி.பி., அமைக்க வலியுறுத்தல்
சாயக்கழிவு அதிகரிப்பால் சி.இ.டி.பி., அமைக்க வலியுறுத்தல்
ADDED : மே 20, 2025 02:04 AM
ஈரோடு, தமிழக எழுச்சி பேரவை மாநில தலைவர் பிரேம்நாத் தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மனு வழங்கி கூறியது:
ஈரோடு மாவட்டத்தில் சாயப்பட்டறை, தோல் தொழிற்சாலை, பிளீச்சிங், பிராசசிங், பிரிண்டிங் பட்டறைகள் வைரபாளையம், பி.பெ.அக்ரஹாரம், கங்காபுரம், வெட்டுக்காட்டுவலசு, சித்தோடு, சூரம்பட்டிவலசு, வெண்டிபாளையம், பவானி, காடையம்பட்டி, பெரியசேமூர், பெருந்துறை சிப்காட் என பல இடங்களில் உள்ளன. இதுபோன்ற ஆலைகள், 1,300க்கும் மேற்பட்டவை அனுமதி பெற்றும், அனுமதி பெறாமலும் இயங்குகின்றன.
ஆலைகளின் பெரும்பாலான கழிவு நீர் பூஜ்ய டிஸ்சார்ஜ் செய்யாமல், பவானி, காவிரி ஆறுகள், காளிங்கராயன், கீழ்பவானி வாய்க்காலில் வெளியேற்றுகின்றனர்.
இன்னும் பலர் நிலத்துக்குள் குழாய் அமைத்தும், ஓடை, சாக்கடை வடிகாலிலும் வெளியேற்றுகின்றனர்.
பெயருக்கு மின் இணைப்பு துண்டிப்பு, இயந்திரங்களை சீலிடுதல் நடவடிக்கை நடக்கிறது. தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள் எனக்கூறி அலட்சியம் காட்டுகின்றனர். ஒரு மீட்டர் துணி பூஜ்ய நிலை சுத்திகரிப்பு செய்ய, 3.10 ரூபாய் செலவாவதால், இவ்வாறு மாற்று வழிகளை கடைபிடிக்கின்றனர்.
எனவே அரசு சார்பில் பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், நவீனமாக அமைத்து கழிவு நீர் எந்த இடத்திலும் வெளியேறாமல் தடுக்க வேண்டும்.
ஜவுளித்தொழில் அழியாமல் தடுக்க, முறையாக செயல்படுவோருக்கு இலவசமாக இடம், மின்சாரம், தண்ணீர், மானியத்துடன் தொழில் கடன் வழங்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
உள்ளூர் வர்த்தக செய்திகள்
* ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 7,383 தேங்காய் வரத்தானது. ஒரு கிலோ, 4௩ ரூபாய் முதல், 60.99 ரூபாய் வரை விற்பனையானது. கொப்பரை தேங்காய், 229 மூட்டை வரத்தாகி முதல் தரம் கிலோ, 184.01 முதல், 189.49 ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 117.39 முதல், 186.89 ரூபாய் வரை, 10,570 கிலோ கொப்பரை, 18.௨௨ லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. எள், 345 மூட்டை வரத்தானது. கருப்பு எள் கிலோ, 95.09 முதல், 149 ரூபாய்; சிவப்பு ரகம், 95.42 முதல், 132.69 ரூபாய்; வெள்ளை ரகம், 12௬ ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தம், 25,632 கிலோ எள், 29.௯௬ லட்சம் ரூபாய்க்கு விற்றது.
* கோபி தாலுகா சிறுவலுார் அருகே பதிப்பாளையம் கருப்பட்டி உற்பத்தியாளர் சங்கத்தில், கருப்பட்டி ஏலம் நேற்று நடந்தது. தென்னங்கருப்பட்டி, 150 கிலோ வரத்தாகி, ஒரு கிலோ, 131 ரூபாய், பனங்கருப்பட்டி, 500 கிலோ வரத்தாகி, 175 ரூபாய்க்கும் விற்பனையானது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் தென்னங்கருப்பட்டி கிலோவுக்கு ஒரு ரூபாய், பனங்கருப்பட்டி ஐந்து ரூபாய் விலை கூடியது.
* சத்தியமங்கலம் பூ சந்தையில் நேற்று நடந்த ஏலத்தில் ஒரு கிலோ மல்லிகை பூ, 560 ரூபாய்க்கு ஏலம் போனது. முல்லை பூ-160, காக்கடா-250, செண்டுமல்லி-70, கோழிக்கொண்டை-80, ஜாதி முல்லை-500, கனகாம்பரம்-300, சம்பங்கி-10, அரளி-70, துளசி-60, செவ்வந்தி-180 ரூபாய்க்கும் விற்பனையானது.
* அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 7,606 தேங்காய் வரத்தானது. ஒரு காய், 38 ரூபாய் முதல் 53 ரூபாய்க்கு விற்றது. தேங்காய் பருப்பு, 61 மூட்டை வரத்தாகி, கிலோ, 175 ரூபாய் முதல் 192 ரூபாய் வரை விற்றது. எட்டு மூட்டை எள் வரத்தாகி, கிலோ, 102 ரூபாய் முதல் 121 ரூபாய்க்கு விலை போனது. ஆறு மூட்டை மக்காச்சோளம் வரத்தாகி கிலோ, 22 முதல் 24 ரூபாய்; ஆமணக்கு ஒரு மூட்டை வரத்தாகி கிலோ, 61 ரூபாய்; ஏழு மூட்டை உளுந்து வரத்தாகி கிலோ, 55 ரூபாய்க்கும் விற்றது.