/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காங்கேயத்தில் ஹோட்டல், பாஸ்ட்புட் கடைகளில் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்ய கோரிக்கை

ADDED : நவ 23, 2024 03:10 AM
காங்கேயம்: காங்கேயத்தில் நுாற்றுக்கணக்கான ஹோட்டல்கள், பேக்கரி, பாஸ்ட்புட் கடைகளும், மாலைநேர தள்ளுவண்டி கடைகளும் உள்ளன. இவற்றில் விற்கப்படும் உணவு பொருட்கள் தரமாக உள்ளதா? என்பது குறித்து, உணவு பாதுகாப்பு துறை அலுவ-லர்கல் அவ்வப்போது ஆய்வு செய்ய, மக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து மக்கள் கூறியதாவது:
மக்கள் அதிகம் கூடும் துரித உணவகங்கள், சாலையோர கடைகள், அசைவ ஹோட்டல்களில் குளிர்சாதன பெட்டிகளில் உணவு பொருட்களை பதப்படுத்தி விற்கின்றனர். காங்கேயத்தில் தற்போது ஒரு சில உணவகங்களில் உணவு தரமற்றும், அழுகிய முட்டை, கெட்டுப்போன இறைச்சியையும் பயன்படுத்துவது தெரிகிறது. உணவுகளை பார்சல் கட்ட பிளாஸ்டிக் பேப்பர்களை பயன்படுத்துகின்றனர். உடல் உபாதை ஆபத்து, உயிரிழப்பு அபா-யத்துக்கு செல்லும் முன், ஹோட்டல்கள் மற்றும் துரித உணவகங்-களில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். மக்களின் புகார், குற்றச்சாட்டு அல்லது பிரச்னை வந்-தால்தான், அதிகாரிகள் ஆய்வு செய்ய வருகின்றனர். அதை விடுத்து மாதம் ஒருமுறை ஆய்வு நடத்தினால், இதுபோன்ற குற்-றச்சாட்டும், குறைகளும் வெகுவாக குறையும். மக்களுக்கும் தர-மான உணவுகள் கிடைக்கும். இவ்வாறு கூறினர்.