/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மொடச்சூர் சந்தை வளாகத்தில் 4 திண்டு கடை இடித்து அகற்றம்
/
மொடச்சூர் சந்தை வளாகத்தில் 4 திண்டு கடை இடித்து அகற்றம்
மொடச்சூர் சந்தை வளாகத்தில் 4 திண்டு கடை இடித்து அகற்றம்
மொடச்சூர் சந்தை வளாகத்தில் 4 திண்டு கடை இடித்து அகற்றம்
ADDED : நவ 23, 2024 01:35 AM
மொடச்சூர் சந்தை வளாகத்தில்
4 திண்டு கடை இடித்து அகற்றம்
கோபி, நவ. 23-
கோபி அருகே மொடச்சூரில், வாரந்தோறும் சனிக்கிழமை, பருப்பு மற்றும் பயிர் ரகங்களுக்கான, சந்தை கூடுகிறது. வியாபாரிகள் வசதிக்காக, பல ஆண்டுக்கு முன், கூடார வசதியுடன் கடை கட்டப்பட்டது. இன்று வாரச்சந்தை கூடும் சூழலில், கோபி நகராட்சி அதிகாரிகள் நேற்று சில கடைகளை பொக்லைன் கொண்டு இடித்து அகற்றினர். இதுகுறித்து நகராட்சி சேர்மன் நாகராஜ் கூறுகையில், 'வாரச்சந்தை வளாகத்தில், போக்குவரத்துக்கு இடையூறாக, சிலர் கடை நடத்துவதாக, கலெக்டருக்கு புகார் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் போக்குவரத்துக்கு இடையூறான கடைகளை இடித்து அகற்ற கமிஷனருக்கு, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அனுமதியுமின்றி இயங்கிய நான்கு திண்டு கடைகள் இடித்து அகற்றப்பட்டது' என்றார்.