/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 13, 2024 03:17 AM
காங்கேயம்:காங்கயம்
வட்டக்கிளை சார்பில், வெள்ளகோவில் ஊராட்சிய ஒன்றிய அலுவலகம்
முன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் சார்பில் நேற்று கண்டன
ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டக் கிளை தலைவர் கணேசன் தலைமை வகித்தார். மாநில
துணைத்தலைவர் செந்தில்குமார் பேசினார்.
அரசு ஊழியர்,
ஆசிரியர்களுக்கு நிதி சார்ந்த கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என்ற
முதல்வரின் அறிவிப்பை கண்டித்து கோஷமிட்டனர். வட்டக்கிளை துணைத்
தலைவர் பரிமளா, நிர்வாகிகள் செந்தில்குமார், ரதி, சிவாச்சலம் உள்பட
பலர் கலந்து கொண்டனர்.இதேபோல் தாராபுரத்தில், தமிழ்நாடு அரசு
ஊழியர் சங்கத்தின் சார்பில், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக
வளாகத்தில், வட்டக்கிளை தலைவர் செந்தில்குமார் தலைமையில்
ஆர்ப்பாட்டம் நடந்தது.

